தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம்

கடையநல்லூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடந்தது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம்
Published on
Updated on

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இணை செயலாளர் கார்த்திக்பாண்டியன், மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்செல்வம், இளைஞரணி செயலாளர் மகேஷ்குமார், இணை செயலாளர்கள் சரவணன் விஜயக்குமார், ஜெயபாஸ்கர், மகளிர் அணி தலைவி அனிதா, செயலாளர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கலந்து காண்டு சிறப்புரையாற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், தலைமை நிலைய செயலாளர் சேகர், மண்டல செயலாளர் இன்பராஜ், சண்முகசுதாகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வைரமுத்து, இணைச் செயலாளர் கனி பாண்டியன், ராஜேந்திரன், ஒன்றிய தலைவர்கள் வெள்ளைச்சாமி, செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் காசி பாண்டியன், அழகர்சாமி, முருகன், சுரண்டை நகர செயலாளர் விஜயகுமார், குற்றாலம் பேரூர் செயலாளர் பழனி, செல்வம், சாமிராஜ், கடையநல்லூர் நகர தலைவர் சங்கலிமாடன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடையநல்லூர் நகர செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com