தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த எழுதி இருக்கிறார்கள். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்து முடிந்தது.

இந்நிலையில் ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, மே 6-ந்தேதி(இன்று) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

இதன்படி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com