

சென்னை,
ஒரே நாளில் 1,760 கிலோ கஞ்சாக்களை அழிக்க தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வாலின் உத்தரவின்படி, மாநிலம் தழுவிய 'ஒரு நாள் ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை' சோதனைகள் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. இன்று (03.11.2026) மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,760 கிலோ கஞ்சா மற்றும் 0.250 கிராம் மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) ஆகியவை செங்கல்பட்டு மாவட்டம். தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கழிவு சுத்திகரிப்பு மற்றும் அழிப்பு நிலையத்தில் அழிக்கப்பட்டன. நடப்பு 2026 ஆம் ஆண்டில், NIB CID பிரிவானது மொத்தம் 868 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7,781.66 கிலோ கஞ்சா, 140.253 கிலோ பிற போதைப்பொருட்கள் மற்றும் 1,440 போதை மாத்திரைகள் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல்துறை தலைவர் மற்றும் ANTF தலைவர், சென்னை NIB CID காவல் கண்காணிப்பாளர் மற்றும் சென்னை TNFSL உதவி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில், வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நம்பிக்கையான தகவல்களைப் பொதுமக்கள் உதவி எண் (Helpline): 10581. வாட்ஸ்அப் (WhatsApp): 9498410581. (E-mail): spnibcid@gmail.com, សំ យ (App): TN Drug Free பகிர்ந்து கொள்ளுமாறு காவல் நிலையம் மூலம் அல்லது அருகிலுள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.