

நாடு தழுவிய அளவில் கடந்த ஜூலை மாதம் அதிக மின்சார வாகனங்கள் பதிவாகியதில் தமிழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள், ஊக் கத் தொகைகளை அளித்து வருகின்றன. இதனால் பதிவு செய்யப்படும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பிரதான சாலைகளில் பச்சை நிற ‘நம்பர் பிளேட்’ உடன் சத்தமே இல்லா மல் சீறிப்பாய்ந்து செல்லும் மின்சார வாகனங்களை இப்போது பரவலாக பார்க்க முடிகிறது.
கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் 3 லட்சத்து 7 ஆயிரத்து 752 மின் சார வாகனங்கள் பதிவாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக உத்தரபிரதே சத்தில் 47 ஆயிரத்து 62 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 36 ஆயிரத்து 642, கர்நாடகாவில் 29 ஆயி ரத்து 183, தமிழகத்தில் 29 ஆயிரத்து 34, மத்தியபிரதேசத்தில் 19 ஆயி ரத்து 133, ராஜஸ்தானில் 17 ஆயிரத்து 79, பீகாரில் 16 ஆயிரத்து 80, மேற்கு வங்காளத்தில் 15 ஆயிரத்து 569, கேரளாவில் 13 ஆயிரத்து 671, குஜராத்தில் 13 ஆயிரத்து 443 வாகனங்கள் பதிவாகியிருக்கின்றன.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு-தனியார் கூட்டாண்மையில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான 20 ஆயிரம் பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கங்களின் மூலம் குடியிருப்புகளில் அமைக்கப்படும் மின் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்கும் என்றும் அறிவித்துள்ளதோடு, இதற்காக ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
கடந்த மாதம் அதிக மின்சார வாகனங்கள் பதிவாகிய முதல் 10 மாநிலங் களில் 3-வது இடத்தில் உள்ள கர்நாடகத்துக்கும், 4-வது இடத்தில் உள்ள தமிழகத்துக்கும் இடையேயான வித்தியாசம் 149 மட்டும்தான். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் மின்சார வாகனங்கள் பதிவாகியதில் தமிழகம் அடுத்தடுத்து முன்னேறி செல்லும் என்று மின்சார வாகன தொழில் நிபுணர்கள் நம் பிக்கை தெரிவித்துள்ளனர்.