தமிழ்நாட்டில் இயல்பை விட 97 சதவீதம் அதிகம் பெய்த கோடை மழை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:-
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை.
நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் கோடை மழை 25 செ.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 97 சதவீதம் அதிகம். சென்னையில் இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக கோடை மழை பெய்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தொடவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






