

சென்னை,
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சங்கங்கள் ஒருங்கிணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 22-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதில் ஜாக்டோ-ஜியோ தீவிரம் காட்டி வருகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் கொண்டுவராது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார். இது, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனையடுத்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களும் நாளை போராட்டத்தில் குதிப்பதால் அரசுப் பணிகள் ஸ்தம்பிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ஊழியர்களின் வருகைப்பதிவு விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காலை 10.30 மணிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.