தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது .இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . மேலும் அவர் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அங்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டார் .விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு பகுதியில் ரூ 42.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு வழங்கினார்

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்.கூறியதாவது ;

உள்ளாட்சித்துறை மக்களுக்கு மிகவும் நெருக்கமாக, மக்களோடு மக்களாக இருக்கும் துறை.மக்களுக்கான திட்டங்களை உடனடியாக செய்து கொடுக்கும் துறையாக உள்ளாட்சித் துறை இருக்க வேண்டும்.

கொழுவாரி சமத்துவபுர திட்டத்திற்கு 2010ஆம் ஆண்டிலேயே நிதி ஒதுக்கப்பட்டது.ஆட்சி மாற்றத்தால் திட்டம் கைவிடப்பட்டது தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கிய திட்டத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி

வலுவான கிராமங்களை உருவாக்கினால் மட்டுமே வலுவான இந்தியாவை கட்டமைக்க முடியும் தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com