எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 29-ந்தேதி வரை நடைபெறுகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
Published on: 

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை கல்வியாண்டின் இடையில் வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2027 மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

அதன்படி பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தமிழ் மற்றும் மொழிப்பாடத் தேர்வுடன் மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 29-ந்தேதி வரை நடைபெறுகின்றன. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 18 வரை நடைபெறுகின்றன. பிளஸ்-1 (அரியர்) மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மே 7-ல் வெளியாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 17 முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுகின்றன. பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 26 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு மே 20-ல் வெளியாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை எழுத இருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com