பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி தேர்வாகாதது அரசின் பொறுப்பற்ற செயல் - அண்ணாமலை

பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி தேர்வாகாதது அரசின் பொறுப்பற்ற செயல் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி தேர்வாகாதது அரசின் பொறுப்பற்ற செயல் - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள். புதுச்சேரி சார்பாக தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்கும்போது, தமிழகப் பள்ளி மாணவர்கள் அணியைத் தேர்வு செய்யாத பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பாரதப் பிரதமர் தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவாக இருப்பதால், சர்வதேச விளையாட்டு போட்டிகளில், முன்னெப்போதையும் விட அதிகமான பதக்கங்களை இந்தியா பெற்று வருகிறது. விளையாட்டுத் துறையில் நம் நாட்டை முன்னேற்ற, தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகம், கேலோ இந்தியா திட்டம், விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரமான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விளையாட்டுத் துறைக்கென அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். 2023-2024 ஆண்டுக்கு, ரூபாய் 3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் பொறுப்பற்ற இந்தச் செயலை, தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com