முதல்-அமைச்சர் விஜய்க்கு தமிழ்நாடு தொலைக்காட்சி டிஜிட்டல், ஓ.டி.டி. தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

முதல்-அமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு தமிழ்நாடு தொலைக்காட்சி டிஜிட்டல், ஓ.டி.டி. தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு தொலைக்காட்சி டிஜிட்டல் மற்றும் ஓ.டி.டி. தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-

“திரையுலகின் முதல்வராக இருந்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கும், தன் பெயரிலும், கட்சியின் பெயரிலும் வெற்றியைக் கொண்டிருக்கும், எதிலும் வெற்றி வாகை சூடும் அழகிய தமிழ்மகன் மரியாதைக்குரிய விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பாக உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

திரைத்துறை சார்ந்த அனைவரும் எங்கள் வீட்டுப் பிள்ளையின் வெற்றியாகக் கருதி பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ்நாடு எல்லா வகையிலும் உங்களால் மென்மேலும் பொலிவு பெறட்டும். தமிழ் மக்கள் செழித்து வாழட்டும். நெகிழ்ந்த அன்பும், மகிழ்ந்த வாழ்த்துகளும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com