

சென்னை,
சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார். இந்த பொருட்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கும் அரசு அரங்குகள், 100-க்கும் மேற்பட்ட வணிக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுலா துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சுற்றுலா பொருட்காட்சி இன்னும் 70 நாட்கள் நடைபெறும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.