தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை; அதிர்ச்சி சம்பவம்


தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை; அதிர்ச்சி சம்பவம்
x

கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று திரும்பியபோது அவரது காரை மர்ம கும்பல் இடைமறித்தது.

மயிலாடுதுறை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன். இவர் இன்று மயிலாடுதுறையில் நடந்த கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று திரும்பியபோது அவரது காரை மர்ம கும்பல் இடைமறித்தது.

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அருகே சென்றபோது மணிமாறனின் காரை கும்பல் இடைமறித்து தாக்கியது. இதனால், அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க மணிமாறன் முயற்சித்துள்ளார்.

காரில் இருந்து தப்பியோட முயற்சித்த மணிமாறனை அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இந்த சம்பவத்தில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மணிமாறனை வெட்டிக்கொன்ற கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளி ஆவார். இதனால் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story