தமிழ்நாட்டின் தனித்தன்மையை நெஞ்சுரத்தோடு காப்பாற்றிய முதல்-அமைச்சர் விஜய்: தமிழ்நாடு வக்பு வாரியம் பாராட்டு

பிரிவினைவாதிகளை தனிமைப்படுத்தி சமூகத்தில் அடையாளப்படுத்துவோம் என்று தமிழ்நாடு வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தனித்தன்மையை நெஞ்சுரத்தோடு காப்பாற்றிய முதல்-அமைச்சர் விஜய்: தமிழ்நாடு வக்பு வாரியம் பாராட்டு
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டின் தனித்தன்மையையும், ஒற்றுமையையும் காப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் நின்றுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ் கனி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

தமிழ்நாட்டின் தனித்தன்மையை நெஞ்சுரத்தோடு காப்பாற்றிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

நல்லிணக்கத்திற்கும், நல்லுறவுக்கும் முன்மாதிரியான தமிழ்நாட்டில் பின் வாசல் வழியாக நல்லிணக்கத்தை கொளுத்தி அரசியல் குளிர் காய நினைத்தவர்களுக்கு சவுகடியாய் தமிழ்நாடு நல்லிணக்க மண் என்பதை நிரூபித்து இருக்கிறார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்.

இறுதி நிமிடம் வரை பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட போதும், மறைமுக அச்சுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும் தமிழ்நாட்டின் தனித்தன்மையையும், ஒற்றுமையையும் காப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் நின்றுள்ளது.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் அண்ணன், தம்பிகளாக, மாமன், மச்சாங்களாக ஒற்றுமையோடும் சகோதரத்துவத்தோடும், உறவோடும் வாழும் மண் தமிழ்நாடு. காலம் காலமாக கட்டிக் காக்கும் இந்த சகோதரத்துவத்தை நாம் தொடர்ந்து கட்டி காப்போம். பிரிவினைவாதிகளை தனிமைப்படுத்தி சமூகத்தில் அடையாளப்படுத்துவோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X