

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் தவெகவுக்கு கூடுதலாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
தற்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். இந்த 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு யாரிடம் இருந்து கிடைக்கும் என்பது தற்போது வரை தெரியவில்லை. இதற்கிடையே, விஜய் இன்று கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், கேரளாவில் இருந்து சென்னைக்கு கவர்னர் வருகை தந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலமாக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் லோக்பவன் சென்றார்.