திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி விமர்சனம்

சாதாரண பெண்கள் முன்னேறினால் திமுக, காங்கிரசால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி கேள்வியெழுப்பியுள்ளார்
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி விமர்சனம்
Published on

கோவை,

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றியதாவது;

பாசம் நிறைந்தவர்கள், கடும் உழைப்பாளிகளை கொண்ட மண் கோவை. திமுகவின் உழல் மலிந்த அரசியலை கோவை மக்கள் புறக்கணித்துள்ளனர். பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுத்தோம். அனைத்து அரசியல் கட்சிகளும் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளிக்ககோரினேன். சாதாரண குடும்ப பெண்கள் அதிக அளவில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு வருவதே என் ஆசை. துரஷிருஷ்டவசமாக இந்த் மசோதா தோல்வியில் முடிந்தது. பெண்களுக்கு அதிகாரம் கொடுப்பதை திமுக விரும்பவில்லை. இதை நிறவேற்ற விடாமல் திமுக, கூட்டணி கட்சிகள் தடுத்துவிட்டனர்.

சாமானிய தமிழ் குடும்ப பெண்கள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆகியிருப்பார்கள். மக்கள் உங்களின் உண்மையான முகங்களை தெரிந்துவிட்டார்கள். உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன். இது எங்கள் போராட்டத்தின் முடிவு அல்ல. இது தொடக்கம், தேசிய ஜனநயாக கூட்டணி உங்களுக்காக போராடுவார்கள். திமுகவின் தீய எண்ணங்களை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

இன்று பெருமையாக சொல்லிக்கொள்ள திமுகவிடம் எந்த சாதனையும் இல்லை. தீய செயல்களில் இருந்து கிடைக்கும் பலன்களின் இருந்து திமுகவால் தப்ப முடியாது. சாதாரண பெண்கள் முன்னேறினால் ஏன் திமுக, காங்கிரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுககாரர்களை எங்கே பார்த்தாலும் கேள்வியெழுப்புங்கள். பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் மசோதாவை ஏன் எதிர்த்தீர்கள் என கேளுங்கள்.

தமிழ்நாட்டுக்கு 11 ஆண்டுகளில் 14 லட்சம் கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் கடன் மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. திமுகவின் கொள்கை, குடும்பத்துக்கு, குடும்பத்தால், குடும்பத்துக்காக என்பது. முதல்வர், துணைமுதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி அனைவரும் ஒரே குடும்பத்தினர். ஏப்ரல் 23ந்தேதி அவர்களுக்கு தெளிவான பதிலை கொடுக்க வேண்டும்.”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com