தமிழ்நாட்டின் மிகப் பெரிய பல்லுயிர்ப் பூங்கா கடம்பூரில் உருவாகிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு


தமிழ்நாட்டின் மிகப் பெரிய பல்லுயிர்ப் பூங்கா கடம்பூரில் உருவாகிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
x
தினத்தந்தி 4 Jun 2025 6:36 PM IST (Updated: 4 Jun 2025 6:37 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் எழில்கொஞ்சும் பல்லுயிர்ப் பூங்கா உருவாகிறது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை

தமிழ்நாட்டின் மிகப் பெரிய பல்லுயிர்ப் பூங்கா செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உருவாகிறது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் மிகப் பெரிய பூங்காவாக, செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உருவாகிறது எழில்கொஞ்சும் பல்லுயிர்ப் பூங்கா!

இன்றைய பார்வையில், சங்க இலக்கியங்கள் சொல்லும் ஐந்திணைப் பூங்கா! இன்று நான் VR-ல் கண்டவற்றை, தமிழ்நாட்டு மக்கள் நேரில் காண விரைந்து உருவாக்கிடுங்கள்" என்று அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு மற்றும் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹுவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.


1 More update

Next Story