

நெல்லை,
சுபகிருது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நெல்லையப்பர் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனால் காலை முதலே நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. அப்போது பொருமையாக நீண்ட வரிசையில் காத்திருந்து நெல்லையப்பர்- காந்திமதி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் நந்தி முன்பு நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர்.