தமிழக இளைஞர்கள் உலக அளவில் சாதிப்பர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி தேர்வில், தமிழகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே இந்திய அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளார்.
தமிழக இளைஞர்கள் உலக அளவில் சாதிப்பர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி சுவே இந்திய அளவில் 2-ம் இடத்தையும், ராஜா முகைதீன் 7-ம் இடத்தையும் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான சுமார் 60 பேரில், 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயன்றவர்கள் என போட்டி தேர்வுகள் கூடுதல் இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக இளைஞர்கள் தேசிய அளவில் சாதிப்பார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

* ’நான் முதல்வன்’ பற்றி ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்-இல் அறிவித்த நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி வெளியானது பெரும் ஊக்கமளிக்கிறது.

* நான் முதல்வனின் முதற்பகுதியே இத்தனை சாதனையார்களை உருவாக்கியிருக்கிறதென்றால், இதன் அடுத்த வெர்சன் எப்படி இருக்குமென நீங்களே பாருங்கள்...

* நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள்!”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com