

சென்னை,
தமிழக அரசின் செலவுகளை குறைக்க உயர்மட்ட ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு நலத்திட்டங்களின் சேவைத்திறனை மேம்படுத்துவதன் வாயிலாக அரசின் செலவுகளை சீரமைப்பது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க உயர்மட்ட செலவின ஆலோசனை குழு அமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய், மகளிர் இலவச பஸ் திட்டங்களால் தமிழக அரசுக்கு வழக்கத்தை விட ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவு ஏற்பட்டது.
தவெக அரசு வீடுகளில் 500 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது, மகளிர் வெற்றி பயண திட்டம் பெயரில் இலவச பஸ் பயணம் விரிவாக்கம், தாய் மாமன் தங்க மோதிரம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
மேலும், வரும் பொங்கல் முதல் மூன்று இலவச சமையல் காஸ் சிலிண்டர் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் வழங்குவதற்கான அக்கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்ற மட்டும் மாதத்திற்கு 2,000 கோடி ரூபாய் என ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் தேவை.
மது வகைகள், கனிமம், பத்திரப்பதிவு போன்ற துறைகளில் நடக்கும் முறைகேட்டை தடுத்து ஆண்டுக்கு 20 ஆயிரம் 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரசுக்கு ஆலோசனைகளை வழங்க பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அமைத்தது.
இதேபோல், மக்கள் நலத்திட்டங்களில் சேவை திறனை மேம்படுத்துவதன் வாயிலாக செலவினத்தை சீரமைப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க உயர்மட்ட செலவின சீர்திருத்த குழு அமைக்கும் பணியில் நிதித்துறை ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை வழங்க உயர்மட்ட செலவின சீர் தொடர்பாக திருத்த ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது.