தோல்வி பயம் காரணமாக ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா என தமிழிசை புகார் டிடிவி தினகரன்

தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா என தமிழிசை புகார் கூறிஉள்ளார் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்.
தோல்வி பயம் காரணமாக ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா என தமிழிசை புகார் டிடிவி தினகரன்
Published on

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட புகார் எதிரொலியாக, வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருந்த நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ளது. வரும் 21-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தற்போது தொகுதி முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரசாரம் ஒரு புறம் நடந்தாலும், மற்றொரு புறம் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் பணியிலும் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை கடுமையான நடவடிக்கை மூலம் தடுக்க முடிந்தால் தேர்தல் நடத்தலாம். இல்லையென்றால் பணம் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்கு ஏலம் விட்டுவிடலாம், என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டிஉள்ளார்.

பணப்பட்டுவாடா செய்வதாக தமிழிசை தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தது தொடர்பாக டிடிவி தினகரன் பேசுகையில்,

தோல்வி பயம் மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே புகார் தெரிவித்து உள்ளார் என கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com