தலைமுடியை நன்றாக சீவுகிறேன், மீம்ஸ் போடும் அளவுக்கு வளர்ந்து உள்ளேன் - தமிழிசை சவுந்தரராஜன்

மீம்ஸ் போடும் அளவுக்கு வளர்ந்து உள்ளேன் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை கூறிஉள்ளார். #BJP #TamilisaiSoundararajan
தலைமுடியை நன்றாக சீவுகிறேன், மீம்ஸ் போடும் அளவுக்கு வளர்ந்து உள்ளேன் - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அரசியலில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு எதிர்க்கட்சியினர் கொள்கையின் ரீதியில் விமர்சிப்பதைவிட சமூக வலைதளங்களில் அவருடைய தோற்றத்தை வைத்து வரும் விமர்சனங்கள்தான் அதிகமாக உள்ளது. அவருடைய கருத்துக்களை வைத்து விமர்சனம் செய்வதைவிட அவருடைய முடியை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பதில் பேசிஉள்ள தமிழிசை, மீம்ஸ் போடும் அளவுக்கு வளர்ந்து உள்ளேன் என குறிப்பிட்டு உள்ளார்.

ஊர் பணத்தை சுருட்டியவர்களை மீம்ஸ் போடுபவர்கள் விட்டுவிடுகிறார்கள், ஆனால் சுருட்டை முடி வைத்து உள்ள என்னை விடுவது கிடையாது. இதற்காகவே இப்போது எல்லாம் நான் நன்றாக தலைமுடியை சீவி வருகிறேன். என்னையும் வடிவேலுவையும் இணைந்து மீம்ஸ் போடுகிறார்கள். இதில் ஒற்றுமை என்னவென்றால் என்னுடைய வீடும், வடிவேலுவின் வீடும் அருகருகே உள்ளது. இன்னொன்று மீம்ஸ் போடும் அளவிற்கு நான் உயர்ந்து உள்ளேன், என கூறிஉள்ளார் தமிழிசை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com