தமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் : சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
Published on:
Copied
Follow Us
சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இதுகுறித்து கூறியதாவது:-
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு என கூறினார்.