தமிழகத்தில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு!

சென்னையில் 96 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 92 ஆக குறைந்தது.
தமிழகத்தில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு!
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 55 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் புதிதாக 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,006 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,025 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,06,649 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 5 ஆயிரத்து 66 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 96 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 92 ஆக குறைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com