

கோவை,
தமிழக கவர்னர் ஆர்.என் ரவி 7 நாள் பயணமாக ஊட்டி சென்றடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் 2000 போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
உதகையில் உள்ள கவர்னர் மாளிகையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெரும் பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் கவர்னர் ஆர்.என் ரவி கலந்துகொள்கிறார்.
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம், அவர் கோவை சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக காரில் நீலகிரி மாவட்டம் சென்றார்.
கவர்னர் வருகையையொட்டி, கோவை விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கவர்னர் செல்லும் வழி நெடுகிலும் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.