தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் யார்? எடப்பாடி பழனிசாமியிடம் பட்டியல் ஒப்படைப்பு

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் தேர்வுக்குழு தலைவரும், மாநில ஆட்சி மொழி ஆணையத் தலைவருமான ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் சந்தித்தார்.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் யார்? எடப்பாடி பழனிசாமியிடம் பட்டியல் ஒப்படைப்பு
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் தேர்வுக்குழு தலைவரும், மாநில ஆட்சி மொழி ஆணையத் தலைவருமான ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் சந்தித்தார். அப்போது, 2015-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அவரிடம் வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆர்.வி.உதயகுமார், சிங்கமுத்து, எம்.என்.ராஜம், ஏ.எல்.ராகவன், சங்கர் கணேஷ், பிரம்மா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்தியா டுடே குழுமத்தின் பொது மேலாளர் கவுஷிகி கங்குலி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் எஸ்.சந்திரமோகன், மாநில ஆதிதிராவிடர் நல குழு மாநில உறுப்பினர் எஸ்.செல்வகுமார், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.வேலுசாமி, சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரவி ஆகியோர் நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com