பஸ் கட்டண உயர்வு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை செயலருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நோட்டீஸ்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #BusFareHike
பஸ் கட்டண உயர்வு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை செயலருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நோட்டீஸ்
Published on

மதுரை

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டண உயர்வை எதிர்த்து கே.கே. ரமேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், பேருந்து கட்டண உயர்வை நிறுத்தி வைக்கக் கோரியும், போக்குவரத்துக் கழகத்தின் ரூ.20,488 கோடி நஷ்டம் பற்றி விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க உத்தரவிடவும் கோரியிருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவும், 22,509 பேருந்துகள் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழக பேருந்துகள் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு, மனு மீது மார்ச் 7ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com