மக்களவைத் தேர்தல் : தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் : தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

2019 மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி - டாக்டர் ஏ.செல்லகுமார்

திருவள்ளூர் - டாக்டர் கே.ஜெயக்குமார்

ஆரணி - எம்.கே.விஷ்ணு பிரசாத்

கரூர் - ஜோதிமணி

திருச்சி - சு.திருநாவுக்கரசர்

விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

கன்னியாகுமரி - ஹெச்.வசந்தகுமார்

தேனி- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சிவகங்கை தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

புதுவை - வைத்தியலிங்கம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com