நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் – சு.வெங்கடேசன்

வெள்ளப்பெருக்கு ஓய்ந்த பிறகு வெளியான பேரழிவின் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் – சு.வெங்கடேசன்
Published on

சென்னை,

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

முன்னெச்சரிக்கை கட்டமைப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது உயிரைப் பறித்து உடைமைகளை அழித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஓய்ந்த பிறகு வெளியான பேரழிவின் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. இயற்கைப் பேரிடர்கள் தீவிரமடைந்த காலத்தில் நாம் உள்ளோம். நமது முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.

ஆழ்ந்த இரங்கல்

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com