விஸ்வநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு

தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.
விஸ்வநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு
Published on

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற வேதாந்தநாயகி விசுவநாத சாமி கோவில் உள்ளது. மறுபிறவி போக்கும் தலமான இங்கு பிரதோஷ காலத்தில் சூரியவாசல் திறக்கப்படுவது வழக்கம். நேற்று சனிப் பிரதோஷம் என்பதால் வழக்கத்துக்கு அதிகமாக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

முன்னதாக சாமி- அம்பாள் நந்தி ஆகியோருக்கு மஞ்சள், திரவியம், பால், பஞ்சாமிர்தம் இளநீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.சிறப்பு பூஜைகளை ஆலய அர்ச்சகர் பிரகாஷ் சிவாச்சாரியார் செய்தார். விஸ்வநாதர் மற்றும் வேதாந்த நாயகிக்கு வெள்ளி கவச அலங்காரம் சாத்தப்பட்டிருந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சூரியவாசல் வழியாக ஆலயத்தில் நுழைந்து சுவாமி அம்பாளை வழிபட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com