டான்செட் நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது

2024-25-ம் கல்வியாண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது.
டான்செட் நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான, 'டான்செட்' நுழைவுத் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. 'சீட்டா' நுழைவுத் தேர்வு வருகிற 10-ந்தேதியும் நடைபெறுகிறது. தேர்வு தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால், மாணவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவுத்தேர்வு மையத்திற்கு நேரில் அணுகலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், 044-22358314 அல்லது 22358289 என்ற எண்ணுக்கோ, tanceeta@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com