'டான்செட்' நுழைவுத்தேர்வு: 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான ‘டான்செட்' நுழைவுத்தேர்வினை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
'டான்செட்' நுழைவுத்தேர்வு: 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்
Published on

சென்னை,

அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு 'டான்செட்' நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2023-24-ம் ஆண்டில் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை எழுத எம்.பி.ஏ. படிப்புக்கு 24 ஆயிரத்து 468 பேரும், எம்.சி.ஏ. படிப்புக்கு 9 ஆயிரத்து 820 பேரும் என மொத்தம் 34 ஆயிரத்து 288 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் எழுதியதாக கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த ஆண்டு வரை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கும் டான்செட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இருந்து பொது என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை என்று அழைக்கப்படும் 'சீட்டா' நுழைவுத் தேர்வாக நடத்தப்பட இருக்கிறது. இந்த சீட்டா நுழைவுத் தேர்வுக்கு 4 ஆயிரத்து 961 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களுக்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com