தங்க தமிழ்செல்வன் திட்டமிட்டு பேசுகிறார்- புகழேந்தி

தங்க தமிழ்செல்வன் திட்டமிட்டு பேசுகிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தங்க தமிழ்செல்வன் திட்டமிட்டு பேசுகிறார்- புகழேந்தி
Published on

சென்னை

தங்க தமிழ்செல்வனுக்கு மனநிலை சரியில்லை. அவரை சரியான மருத்துவரிடம் காட்டி ஆலேசனை பெற வேண்டும் என அமமுக வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை பறிகொடுத்ததோடு, மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனை ஆபாசமாக விமர்சித்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கட்சி நிலவரங்கள் குறித்தும் தங்க தமிழ்செல்வன் பேசிய வாட்ஸ்அப் ஆடியே பேச்சு குறித்தும் இன்று காலை 10 மணியளவில் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து டிடிவி தினகரன் ஆலேசனை நடத்துகிறார். இதற்காக நிர்வாகிகள் வரத்தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, உண்மையாக தவறு செய்திருந்தால், என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் கூறுகையில், அந்த ஆடியோ உண்மைதான். அவருக்கு மனநிலை சரியில்லை. வீட்டிலிருப்பவர்கள் அவரை சரியான மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலேசனை பெறுவது சிறந்தது என்று கூறியுள்ளார்.

புகழேந்தி கூறும் போது, தங்க தமிழ்செல்வன் வருத்தம் தெரிவிக்காமல் கட்சியிலிருந்து நீக்கச் சொல்வதை பார்த்தால் திட்டமிட்டு பேசுவது தெரிகிறது. மண்டல பொறுப்பாளர்கள் குறித்து கட்சி கூட்டத்தில் நானும் தான் கூறி இருக்கிறேன் என புகழேந்தி கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com