தஞ்சையில் பரபரப்பு: ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி...!

தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சையில் பரபரப்பு: ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி...!
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பிரவீன்(வயது22), பரமேஸ்வரன்(21), மணிகண்டன்(21).

இவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரத்தநாட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில், ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து இரவு திடீரென இவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

தற்போது மாணவர்கள் 3 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com