மரவள்ளி கிழங்கு விலை 'கிடுகிடு' உயர்வு

மரவள்ளி கிழங்கு அறுவடை, சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.
மரவள்ளி கிழங்கு விலை 'கிடுகிடு' உயர்வு
Published on: 

ஈரோடு,

ஈரோடு உட்பட பெரும்பாலான மாவட்டங்களில், டிசம்பர் முதல், ஏப்ரல் 15-ம் தேதி வரை மரவள்ளி கிழங்கு சீசன் காலம். மானாவாரி சாகுபடியில் நவம்பரில் சீசன் தொடங்கும். கடந்த ஆண்டு குறைந்த மழை, நடப்பாண்டு மழை, வாய்க்கால் நீர் இல்லாததால், மரவள்ளி கிழங்கு அறுவடை, சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

தற்போது சீசன் இல்லை என்றபோதும், உணவு, சிப்ஸ் போன்ற தயாரிப்பு, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்திக்கு வாங்கி செல்வர். உற்பத்தி மிகவும் குறைந்ததால் ஒரு மாதத்துக்குள் டன், 4,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கூறியதாவது:-

மரவள்ளி கிழங்கு சேகோ ஆலைகளுக்கு டன், 15,000 ரூபாய்க்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 11,000 ரூபாய்க்கு விலை போன நிலையில் தற்போது, 4,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஓரளவு பருவமழை கை கொடுத்து, வாய்க்காலில் தண்ணீர் வரத்தானால் விவசாயிகளுக்கு கூடுதலாக விளைச்சல் இருந்து அதிக லாபம் கிடைத்திருக்கும்.

விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த விலை உயர் வால், 90 கிலோ ஸ்டார்ச் மாவு மூட்டை, ரூ.4,000-ல் இருந்து, ரூ. ஆகவும், ஜவ்வரிசி மூட்டை, 5,500 2, 6,300 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com