விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பட் பதவியேற்பு

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றார்.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பட் பதவியேற்பு
Published on

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் விளவங்கோடு தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் கடந்த 2011, 2016, 2021-ம் ஆண்டுகளில் நடந்த 3 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவருக்கும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதன் காரணமாக விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பட் களமிறக்கப்பட்டார். அவர் 91 ஆயிரத்து 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பட் பதவியேற்றார். சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com