பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் கேட்ட டாஸ்மாக் ஊழியர்: பேடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற இளைஞர்!

இளைஞரிடம், பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 5 ரூபாய் வழங்குமாறு கடை ஊழியர் கேட்டுள்ளார்.
அரசு டாஸ்மாக் கடை
டாஸ்மாக்
Published on: 

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கடையில், குவாட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், கடையிலிருந்த பேடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதலாக 5 ரூபாய்

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு எராளமான மது பிரியர்கள் மது வாங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மது வாங்கச் சென்ற இளைஞர் ஒருவர், அங்கிருந்த விற்பனையாளரிடம் குவாட்டர் மது பாட்டில் கேட்டுள்ளார். அப்போது, பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 5 ரூபாய் வழங்குமாறு கடை ஊழியர் கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த இளைஞரின் செயல்

கூடுதல் பணம் கேட்டதால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்த அந்த இளைஞர், கடை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர், கடையில் பணப் பரிவர்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த பேடிஎம் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அரசு மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், கூடுதல் பணம் கேட்டதற்காக பணப் பரிவர்த்தனை இயந்திரத்தையே இளைஞர் தூக்கிச் சென்ற இச்சம்பவம் சமூக வலைதளங்களிலும் அப்பகுதியிலும் பேசுபொருளாகியுள்ளது.

X