அருமனை அருகே டாஸ்மாக் ஊழியர் தற்கொலை

அருமனை அருகே டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை அருகே டாஸ்மாக் ஊழியர் தற்கொலை
Published on

அருமனை:

அருமனை அருகே கடையால் ஆம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 49). இவர் பளுகல் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் விஷ மாத்திரை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரெதிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக கடையல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com