டாஸ்மாக் பணியாளர்கள் இன்று பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் விக்னேஷ் அறிக்கை

பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்படவில்லை.
டாஸ்மாக் பணியாளர்கள் இன்று பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் விக்னேஷ் அறிக்கை
Published on

சென்னை,

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே மாதம் 2022-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டு படிப்படியா கத் தற்பொழுது சென்னை, நெல்லை, விருதுநகர் நீங்கலாக தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளிமு கமை வழியாகத் திரும்பப்பெற வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்னிறுத்தி ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்படவில்லை.

இந்தநிலையில், பணியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க வெளிமுகமை யின் வழியாக காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை உடனடியாக உருவாக்கி ஐகோர்ட்டில் உறுதிபத்திரம் அளித்து வரும் ஜூன் மாத இறுதிக்குள் பணியாளர்களின் கோரிக்கையை முழுவதும் நிறைவேற் றும் வண்ணம் அவர்கள் பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை கையாளும் தற்போதைய நடைமுறையை முழுமையாக தவிர்க்கும் வகை யில் திட்டம் செயல்படுத்தப்படும். எனவே, பணியாளர்கள் அனைவரும் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மதிப்பளித்து பணியாளர் நலன் காக்க நிர்வாகம் முன்மொழியும் இத்திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு இன்று முதல் வழக்கம் போல பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com