

சென்னை,
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,000க்கும் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு அந்த மாவட்டங்களுக்கான தளர்வுகள், இதர மாவட்டங்களுக்கான தளர்வுகள் என பிரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார். பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் பொதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் தேநீர் கடைகள் மற்றும் சலூன்கள் திறக்கவும் அனுமதிக்கப்படவில்லை.