சிவகங்கையில் டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு!


சிவகங்கையில் டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு!
x
தினத்தந்தி 22 May 2025 9:49 AM IST (Updated: 22 May 2025 11:46 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு நள்ளிரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் வந்திருந்தனர்.

வந்தவர்கள் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடை தீ பிடித்து எரிந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனையடுத்து டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story