தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் வருகிற 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதில் துணை வாக்குச்சாவடிகளும் அடங்கும்.

தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்களுக்கு மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 21-ம் தேதி காலை 10 மணி முதல் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com