மிலாடி நபி-காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்

மிலாடி நபி-காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
மிலாடி நபி-காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்
Published on

தமிழ்நாட்டில் நாளை (வியாழக்கிழமை) மிலாடிநபி விழாவும், வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மதுபான கூடங்களும் மூடப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் நாளை மற்றும் வருகிற 2-ந்தேதி ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்) மற்றும் ஆனி மேரி ஸ்வர்ணா(அரியலூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com