

சென்னை,
மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படும் என்று சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மிலாது நபியை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) முதல் எப்.எல்.11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.