

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வில்லா முழு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டி பொதுமக்கள் வசதிக்காக இந்த ஏற்பாட்டை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல தங்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படலாம் என்றும், வேண்டிய மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்றும் மதுப்பிரியர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் டாஸ்மாக் கடைகள் 23-ந் தேதி (இன்று) திறக்கப்படாது என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.
கடந்த 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.