

சென்னை,
தமிழகத்தில் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 7 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், 7 ஆம் தேதிக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மதுப்பிரியர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பபட்டிருக்கும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் மேலாண் இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் மூடி இருக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து கண்காணித்து கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.