தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது


தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
x

புளியங்குடியில் தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் பிரான்சிஸ் (வயது 35). இவர் புளியங்குடியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது, அரசு பொது தேர்வை முன்னிட்டு மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்தில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடைபெற்று வருகிறது.

சம்பவத்தன்று 10-ம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியர் பிரான்சிஸ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர் அருண்பிரசாத், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, பிரான்சிஸ், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் அருண்பிரசாத் புளியங்குடி ேபாலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பிரான்சிசை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் புளியங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story