

மதுரை,
மதுரையில் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மதுரை மேற்கு யூனியன் விரிவாக்க சமூக நல அலுவலராக இருப்பவர் ராஜாத்தி. இவருக்கு குழந்தைகள் நல ஹெல்ப்லைன் எண்ணில் இருந்து ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் விசாரணை நடத்தினார்.
அப்போது பீ.பி. குளம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சந்தோஷ்குமார் (வயது 30) என்பவர் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது. மேலும் மாணவியுடன் குடும்பம் நடத்தியதில், அந்த மாணவி 3 மாத கர்ப்பமானது உறுதி செய்யப்பட்டது.