ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை.
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் வேலை பார்த்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி ஆசிரியர்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் தீபக்குமார் போர்டே (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. அவர், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே தீபக்குமார் போர்டே, கடன் பிரச்சினையை தீர்க்க ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டார். ஆன்லைன் விளையாட்டில் எதிர்பார்த்ததை விட பணம் அதிகமாக இழப்பு ஏற்பட்டு, அவருக்கு லட்சக் கணக்கில் கடன் ஆகிவிட்டது. இதனால் விரக்தி அடைந்த தீபக்குமார் போர்டே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com