மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு

மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு
Published on

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது வீட்டில் இருந்து எடுத்து செல்லும் உணவை சாப்பிட்டு விட்டு பாத்திரத்தை மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி கழுவுவது வழக்கம்.

நேற்றும் அது போல மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் உள்ள குழாயில் பாத்திரம் மற்றும் கைகளை கழுவி விட்டு மீண்டும் ரெயிலில் ஏறுவதற்காக வந்தார். அப்போது ரெயில் புறப்பட்டு விட்டது.

அவசரமாக ஓடி வந்து ஏறும் போது கால் தவறி நடை மேடைக்கும் ரெயிலுக்கும் இடையில் விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலை மீட்ட செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com