ஊருணியில் மூழ்கி ஆசிரியர் பலி

முதுகுளத்தூர் அருகே குளிக்க சென்ற ஆசிரியர் ஊருணியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்
ஊருணியில் மூழ்கி ஆசிரியர் பலி
Published on

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே குளிக்க சென்ற ஆசிரியர் ஊருணியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்னாசி ரிச்சர்ட்(வயது 52). இவர் நயினார்கோவில் அருகே வல்லம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரூபில்லா. இவரும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்தநிலையில் திருவரங்கம் கிராமத்தில் உள்ள அம்பலத்தான் ஊருணியில் இன்னாசி ரிச்சர்ட் குளிக்கச் சென்றார். அப்போது ஊருணி சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இந்த தகவல் அறிந்த கீழத்தூவல் போலீசார். விரைந்து சென்று இன்னாசி ரிச்சர்ட் உடலை மீட்டு பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com